6 மாதம் வரை விளையாட முடியாது - வதந்திகளுக்கு பும்ரா கொடுத்த ரியாக்ஷன் வைரல்

பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் கடைசி போட்டியின்போது பும்ரா காயம் அடைந்தார்.;

Update:2025-01-16 09:36 IST

image courtesy: AFP

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின்போது முதுகில் வீக்கம் ஏற்பட்டது. இந்த வீக்கம் குணமாக மார்ச் முதல் வாரம் ஆகும் என கூறப்படுகிறது. அதனால் அவர் லீக் ஆட்டங்களில் ஆட மாட்டார் என கூறப்படுகிறது.

இதனிடையே வீக்கம் குறைய அவர் வீட்டிலேயே படுக்கையில் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், 6 மாதம் வரை விளையாட முடியாது எனவும் வதந்திகள் பரவின.

இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு பும்ரா கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பும்ரா வெளியிட்டுள்ள பதிவில், "போலிச் செய்திகளைப் பரப்புவது எளிது என்று எனக்குத் தெரியும், ஆனால் இது என்னை சிரிக்க வைத்தது நம்ப முடியாத ஆதாரங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்