உலகக்கோப்பையுடன் 'செல்பி'

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 5-ந்தேதி இந்தியாவில் தொடங்குகிறது.

Update: 2023-09-15 05:11 GMT

கொழும்பு,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5-ந்தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன.

உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அதில் வெற்றி பெற்ற அணிக்கு வழங்கப்படும் சாம்பியன் கோப்பை ஒவ்வொரு நாட்டிலும் 'டிராபி டூர்' என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று உலகக்கோப்பை இலங்கை தலைநகர் கொழும்புவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. உலகக்கோப்பையுடன் ரசிகர், ரசிகைகள் உற்சாகமாக செல்பி எடுத்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்