ரஞ்சி கோப்பை கிரிக்கெட்; தமிழக அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் குஜராத் 236 ரன்களில் ஆல் அவுட்..!

தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக எம் முகமது 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

Update: 2024-01-05 16:24 GMT

image courtesy;twitter/ @BCCIdomestic

காந்திநகர்,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இன்று தொடங்கியது. தொடக்க நாளான இன்று 16 லீக் ஆட்டங்கள் ஆரம்பமாகின.

இதில் குஜராத் மாநிலம் வல்சத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சாய்கிஷோர் தலைமையிலான தமிழக அணி, சின்டன் கஜா தலைமையிலான குஜராத் அணியுடன் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி தமிழக வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 72.3 ஓவர்களில் 236 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக உமங் குமார் 76 ரன்கள் அடித்தார். தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக எம் முகமது 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

2-வது நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. அதில் தமிழக அணி தனது முதல் இன்னிங்சை தொடங்க உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்