ரஞ்சி கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணி 303 ரன்களுக்கு ஆல்-அவுட்

சவுராஷ்டிரா-பஞ்சாப் இடையிலான கால்இறுதியில் முதலில் ஆடிய சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 303 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

Update: 2023-01-31 21:28 GMT

இந்தூர்,

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் இந்தூரில் நடைபெறும் நடப்பு சாம்பியன் மத்தியபிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆந்திரா நேற்றைய ஆட்டம் முடிவில் 2 விக்கெட்டுக்கு 262 ரன்கள் சேர்த்தது. ரிக்கி புய் 115 ரன்னுடனும், கரண் ஷிண்டே 83 ரன்களுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர்.

அதே போல் ராஜ்கோட்டில் நடக்கும் சவுராஷ்டிரா-பஞ்சாப் அணிகள் இடையிலான கால்இறுதியில் முதலில் ஆடிய சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 303 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. 9-வது வரிசையில் களம் கண்டு அணியை தூக்கி நிறுத்திய பார்த் புத் (111 ரன், 155 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்) சதம் அடித்தார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பஞ்சாப் அணி ஆட்ட நேர முடிவில் ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தாவில் நடைபெறும் பெங்காலுக்கு எதிரான கால்இறுதியில் முதலில் ஆடிய ஜார்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 173 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்