ரஞ்சி கிரிக்கெட்: மத்தியபிரதேசத்திற்கு எதிரான கால்இறுதி ஆட்டம் - 2-வது இன்னிங்சில் ஆந்திர அணி 93 ரன்களில் சுருண்டது

151 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆந்திர அணி 32.3 ஓவர்களில் 93 ரன்னில் சுருண்டது.

Update: 2023-02-02 21:51 GMT

இந்தூர்,

இந்தூரில் நடைபெறும் மத்தியபிரதேசம்-ஆந்திரா அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய ஆந்திர அணி முதல் இன்னிங்சில் 379 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய மத்தியபிரதேச அணி 2-வது நாளில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து இருந்தது. 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய மத்தியபிரதேச அணி 228 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

151 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆந்திர அணி 32.3 ஓவர்களில் 93 ரன்னில் சுருண்டது. மத்தியபிரதேசம் தரப்பில் அவேஷ் கான் 4 விக்கெட்டும், கவுரவ் யாதவ் 3 விக்கெட்டும், குமார் கார்த்திகேயா 2 விக்கெட்டும் சாய்த்தனர். இதனை அடுத்து 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய மத்தியபிரதேசம் நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் எடுத்தது.

Tags:    

மேலும் செய்திகள்