குஜராத் அணியின் சூழலில் வீழ்ந்த ராஜஸ்தான்..! 118 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

குஜராத் சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டும் , நூர் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Update: 2023-05-05 15:44 GMT

ஜெய்ப்பூர்,

16வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , ஜோஸ் பட்லர் களமிறங்கினர். தொடக்கத்தில் பட்லர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் ஜெய்ஸ்வால் 14 ரன்களுக்கு வெளியேறினார்.

பின்னர் சிறப்பாக விளையாடிய சாம்சன் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். குஜராத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து களமிறங்கிய அஸ்வின் 2ரன்கள் , பராக் 4ரன்கள் , படிக்கல் 12ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த ஹெட்மையர் 7 ரன்கள் , ஜூரல் 9 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.இறுதியில் 17.5  ஓவர்களுக்கு 10விக்கெட் இழந்து 118ரன்கள் எடுத்தது ராஜஸ்தான்.

குஜராத் சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டும் , நூர் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 119ரன்கள் இலக்குடன் குஜராத் விளையாடுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்