கேட்ச்சை தவறவிட்ட ராகுல்...கோபத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித்...!

இந்தியாவை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் த்ரில் வெற்றி பெற்றது.

Update: 2022-12-05 05:54 GMT

Screen Grab From Video Tweeted By @MCG82_

டாக்கா,

இந்தியா - வங்காளதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 41.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் எடுத்தது. 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி 46 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் இந்தியாவை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் தவறவிட்ட கேட்ச் இந்திய அணியின் தோல்விக்கு வழிவகுத்துள்ளது. வங்காளதேச அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி வெற்றிபெற்றுவிடும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், கடைசி வீரராக களமிறங்கிய ரஹ்மானுடன் ஜோடி சேர்ந்த மிஹிடி ஹசன் மிர்சா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ரன்களை வேகமாக அடிக்க இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு நழுவிக்கொண்டே இருந்தது. அப்போது, ஷர்துல் தாகூர் வீசிய 43-வது ஓவரின் 3-வது பந்தை ஹசன் மிர்சா விளாசினார். அது கேட்ச் நோக்கி சென்றது.

இதையடுத்து, அந்த பந்தை கேட்ச் பிடிக்க விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் வேகமாக ஓடி சென்றார். அவர் கேட்சி பிடிக்க முயற்சித்தபோது பந்து அவரது கையில் இருந்து நழுவி கீழே விழுந்தது. கேட்சி தவறவிட்டதை தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹசன் மிர்சா வங்காளதேசத்தை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

ஹசன் மிர்சா - ரஹ்மான் ஜோடி கடைசி விக்கெட்டில் 51 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்திய அணியின் தோல்விக்கு ராகுல் கேட்ச் பிடிக்க தவறியதால் அவரை சமூகவலைதளங்களில் விமர்சன் செய்து வருகின்றனர். இந்நிலையில் ராகுல் கேட்ச்சை தவறவிட்ட பின் கேப்டன் ரோகித் சர்மா கடுமையாக கோபம் அடைந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்