ரிஷப் பண்ட்டிற்கு முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றி...! - பிசிசிஐ அறிவிப்பு

ரிஷப் பண்ட்டிற்கு வெற்றிகரமாக முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-01-07 21:05 GMT

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த 30-ம் தேதி விபத்தில் சிக்கினார். டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு அதிகாலை சொகுசு காரில் சென்றார். காரை ரிஷப் பண்டே ஓட்டி சென்றார்.

அதிகாலை 5.30 மணியளவில் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்கலார் என்ற பகுதியில் அதிவேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரின் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்து ரிஷப் பண்ட் உயிர் தப்பினார். ஆனால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

படுகாயமடைந்த ரிஷப் பண்ட் உத்தரகாண்டில் உள்ள டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், மேல் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் ரிஷப் பண்ட் டேராடூனில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ரிஷப் பண்ட்டிற்கு நேற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முழங்கால் தசைநார் கிழிந்த நிலையில் அதற்கான அறுவை சிகிச்சை நேற்று முன் தினம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாக பிசிசிஐ நேற்று தெரிவித்தது.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ள நிலையில் மருத்துவமனையில் இருந்து ரிஷப் பண்ட் விரைவில் டிஸ்சார்ஜ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்