பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பயிற்சி மேற்கொள்ளும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்..!!
உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
ஆமதாபாத்,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இதில் நாளை நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இரண்டு அணிகளும் தங்களது முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் 3-வது வெற்றியை பெறப்போகும் அணி எது என்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் 48 ஆண்டு கால ஒரு நாள் உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணி பாகிஸ்தானிடம் ஒருபோதும் தோற்றதில்லை என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையொட்டி நேற்று பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட போது ஸ்டேடியத்திற்கு வெளியேயும், உள்ளேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.