'தல' தோனி மட்டும் தான் தலைவன்... தமிழில் டுவீட் போட்ட ஹர்பஜன் சிங்
'தல' தோனி மட்டும் தான் தலைவன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
சென்னை,
16வது ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் 4 லீக் ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. பஞ்சாப், ஐதராபாத், டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறி விட்டன.
இந்நிலையில், நேற்று 2 முக்கியமான லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி 2வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில், பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ள சென்னை அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "வழியில் கண்ட மிருகங்களை தந்திரமாய் இழுத்து செல்லும் ஓநாய் கூட்டத்திற்கு வேட்டையாடி,வென்று, நிற்கும் சென்னை அணியின் வெற்றி தெரிவதில்லை. எல்லா தகுதியும் இருக்குறவன் தலைவன் இல்ல. சென்னை அணி மொத்ததயும் ஐ.பி.எல் கோப்பையை அடிக்க தகுதியானவங்களா மாத்துன தல எம்.எஸ். தோனி தான் தலைவன்" என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
வழியில் கண்ட மிருகங்களை தந்திரமாய் இழுத்து செல்லும் ஓநாய் கூட்டத்திற்கு வேட்டையாடி,வென்று, நிற்கும் @ChennaiIPL இன் வேட்கை தெரிவதில்லை.எல்லா தகுதியும் இருக்குறவன் தலைவன் இல்ல.#CSK டீம் மொத்ததயும் #IPL2O23 கப் அடிக்க தகுதியானவங்களா மாத்துன #Thala #MSDhoni தான் தலைவன் #CSKvsDC
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 20, 2023