விராட் கோலி பிறந்தநாளையொட்டி, பூரி கடற்கரையில் மணற்சிற்பம்...!

விராட் கோலி பிறந்தநாளையொட்டி, பூரி கடற்கரையில் மணற்சிற்பம் வடிவமைக்கப்பட்டது.

Update: 2023-11-05 05:00 GMT

ஒடிசா,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் பேட் மற்றும் பந்துடன் கூடிய விராட் கோலி மணல் சிற்பத்தை வரைந்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்