இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்; நியூசிலாந்து அணி அறிவிப்பு...!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-09 06:21 GMT

Image Courtesy: @ICC

வெல்லிங்டன்,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக தங்களுக்கு உள்ள ஒருநாள் தொடர்களில் சிறப்பாக ஆடி அணியை கட்டமைக்க அனைத்து அணி நிர்வாகங்களும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை தொடருக்கு 18 பேர் கொண்ட முதன்மை அணியை அறிவித்துள்ளது. இந்த முதன்மை அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் ஆட உள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து அணி யுஏஇ-ல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது.

இந்நிலையில் இந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் டிரெண்ட் பவுல்ட் சேர்க்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பை தொடருக்கு தயாராக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி விவரம்:

டாம் லதாம் (கேப்டன்), பின் ஆலென், டிரெண்ட் பவுல்ட், டெவான் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னெர், டிம் சவுதி, வில் யங்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி விவரம்:-

டிம் சவுதி (கேப்டன்), மார்க் சாம்ப்மென், கைல் ஜேமிசன், ஜிம்மி நீஷம், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னெர், டிம் செய்பர்ட், பின் ஆலென், டெவான் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, ஆடம் மில்னே, டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், இஷ் சோதி.

யுஏஇ-க்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி விவரம்:-

டிம் சவுதி (கேப்டன்), மார்க் சாம்ப்மென், கைல் ஜேமிசன், ஜிம்மி நீஷம், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னெர், டிம் செய்பர்ட், ஆதி அசோக், சாட் பவுஸ், டேன் க்ளெவர், டீன் பாக்ஸ்க்ராப்ட், பென் லிஸ்டர், கோல் மெக்கோன்சி, பிளேர் டிக்னர், வில் யங்.

Tags:    

மேலும் செய்திகள்