ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: காயம் காரணமாக இந்திய அணியின் முக்கிய வீரர் விலகல்

டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

Update: 2023-03-15 16:46 GMT

புதுடெல்லி,

ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. அடுத்ததாக ஒருநாள் தொடர் மார்ச் 17-ந் தேதி தொடங்குகிறது.இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா குடும்ப நிகழ்ச்சி காரணமாக முதலாவது ஒரு நாள் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக தொடக்க ஆட்டத்தில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்த உள்ளார்

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் அய்யர் காயம் காரணமாக  ஆமதாபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் 4-வது நாளில் பேட்டிங் செய்யாமல் போட்டியில் இருந்து விலகினார். ஸ்ரேயாஸ் அய்யர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய கிரிக்கெட் வாரிய மருத்துவ குழுவினரின் ஆலோசனைப்படி காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாக சில வாரங்கள் ஆகும் என்று தெரிகிறது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் விலகி உள்ளார் என தகவல் வெளியானது.

இந்த நிலையில் அந்த தகவலை இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திலிப் உறுதி செய்துள்ளார்.

இது குறித்து பீல்டிங் பயிற்சியாளர் திலிப் கூறியதாவது ,

காயங்கள் விளையாட்டின் ஒரு பகுதியாகும். எங்களிடம் சிறந்த மருத்துவ வசதிகள் உள்ளன, அவை நன்கு பொருத்தப்பட்டுள்ளன... நாங்கள் தேசிய கிரிக்கெட் அகாடமி உடன் ஒருங்கிணைப்பில் உள்ளோம். இந்தத் தொடரில் இருந்து ஷ்ரேயாஸ் விலகியுள்ளார் . என தெரிவித்துள்ளார் .

Tags:    

மேலும் செய்திகள்