"லாகூரில் பெட்ரோல், பணம் இல்லை"- பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காட்டம்

முகமது ஹபீஸ் பாகிஸ்தானில் நிலவி வரும் சூழல் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.;

Update: 2022-05-26 05:58 GMT

 Image Courtesy : AFP 

லாகூர்,

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த நாட்டு ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்நிய செலவாணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.

இதையடுத்து அங்கு அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்படும் நிலவி வரும் சூழலில் அங்கு பெட்ரோலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஏடிஎம் மையங்களிலும் பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் அங்கு நிலவி வரும் சூழல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " லாகூரில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் இல்லை. ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லை. ஒரு சாமானிய மனிதன் ஏன் அரசியல் முடிவுகளால் பாதிக்கப்பட வேண்டும்" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த டுவிட்டர் பதிவை வெளியிட்ட அவர், இம்ரான் கான், மரியம் ஷரிப், பிரதமர் ஷெபாஷ் ஷரிப் உள்ளிட்டவர்களை டேக் செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்