வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடர்; புது கேப்டனுடன் களம் இறங்கும் நியூசிலாந்து அணி...!
வரும் 21ம் தேதி நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது.
வெல்லிங்டன்,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணம் முடிவடைந்த பின்னர் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது.
உலகக்கோப்பை தொடருக்கு இந்த தொடரை பயன்படுத்தி தங்களது சீனியர் வீரர்களை நியூசிலாந்து அணி தயார்படுத்தும் என நினைத்த வேளையில் இந்த தொடரில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து துணை கேப்டன் டாம் லதாம், டிம் சவுதி, சாண்ட்னெர், கான்வே, மிட்செல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களை கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணிக்கு லாக்கி பெர்குசன் தலைமை தாங்குகிறார்.
நியூசிலாந்து அணி விவரம்:- லாக்கி பெர்குசன் (கேப்டன்), பின் ஆலென், டாம் ப்ளெண்டல், ட்ர்ண்ட் பவுல்ட், சாட் பெளஸ், டேன் க்ளெவர், டீன் பாக்ஸ்ராப்ட், கைல் ஜேமிசன், கோல் மெக்கோன்சி, ஆடம் மில்னே, ஹென்றி நிக்கோல்ஸ், ரச்சின் ரவீந்திரா, இஷ் ஷோதி, ப்ளெய்ர் டிக்னர், வில் யங்.