நாட்டுக்காக விளையாடுவதே என்னுடைய முதல் இலக்கு - மிட்செல் ஸ்டார்க்

இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி ஏலத்தில் வாங்கியது.

Update: 2023-12-26 06:05 GMT

image courtesy; AFP

சிட்னி,

இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு விலை போனார். அவரை இந்த தொகைக்கு கொல்கத்தா அணி ஏலத்தில் வாங்கியது.

மிட்செல் ஸ்டார்க் 8 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் எது நடந்தாலும் நாட்டுக்காக விளையாடுவதே தம்முடைய முதல் இலக்கு என்று மிட்சேல் ஸ்டார்க் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,' எது நடந்தாலும் நாட்டுக்காக விளையாடுவதே என்னுடைய முதல் இலக்கு. நான் எப்போதுமே சர்வதேச கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். கிரிக்கெட்டிலிருந்து விலகி என்னுடைய மனைவி அலிசா அல்லது குடும்பத்தினருடன் தேவையான நேரத்தையும் நான் செலவிடுவேன். அதன் வாயிலாக புத்துணர்ச்சி பெற்று ஆஸ்திரேலியாவுக்காக விளையாட தயாராக இருப்பேன்.

இப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதே என்னுடைய முதன்மை முக்கியத்துவமாகும். அதில் எதுவரை விளையாட முடியும் என்பதை என்னுடைய உடல் சொல்லும். இந்த வருடம் ஐபிஎல்-ல் எனக்கு கிடைத்த பணம் சிறப்பாக இருந்தது. ஆனால் நான் எப்போதும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளித்து வருகிறேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்