முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை, இமாசலபிரதேசம்

கொல்கத்தாவில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை-இமாசலபிரதேசம் அணிகள் மோதுகின்றன.

Update: 2022-11-03 22:11 GMT

image courtesy: BCCI Domestic twitter

கொல்கத்தா,

38 அணிகள் பங்கேற்ற சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் இமாசலபிரதேசம்-பஞ்சாப் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த இமாசலபிரதேச அணி 7 விக்கெட்டுக்கு 176 ரன்கள் குவித்தது. சுமீத் வர்மா (51 ரன், 25 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) அரைசதம் அடித்தார். பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 163 ரன்களே எடுத்தது. இதனால் இமாசலபிரதேச அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதிகபட்சமாக சுப்மான் கில் 45 ரன் (32 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார்.

மற்றொரு அரைஇறுதியில் மும்பை-விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 'டாஸ்' வென்று முதலில் பேட் செய்த விதர்பா 7 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 16.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 73 ரன்னும், பிரித்வி ஷா 34 ரன்னும் விளாசினர். கேப்டன் ரஹானே 5 ரன்னில் போல்டு ஆனார்.

கொல்கத்தாவில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை-இமாசலபிரதேசம் அணிகள் மோதுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்