அது நடக்கவில்லை என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் ஓய்வு பெறுவார் - முன்னாள் வீரர் கருத்து

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது.

Update: 2024-11-04 14:40 GMT

Image Courtesy: AFP

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா தனது கிரிக்கெட் வாழ்வின் கடைசி கட்டத்தில் இருக்கும் நிலையில், அவருக்கு அடுத்த கேப்டனை இப்போதே நியமிக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். தற்போது இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக பும்ரா செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் ரோகித் சிறப்பாக செயல்படவில்லை எனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நீங்கள் முன்கூட்டியே சிந்திக்க தொடங்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சிறப்பாக செயல்படாவிட்டால் ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று நான் நினைக்கிறேன்.

அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனவே அவர் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடலாம். அவர் நீண்ட காலம் இளமையாக இருக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அணி படுதோல்வி அடைந்திருந்தாலும் குறைந்தபட்சம் ரோகித் சர்மாவுக்கு ஒரு தைரியம் இருந்தது.

அவர் இப்படியான ஒரு தோல்விக்கு தன்னை பொறுப்பாளியாக அறிவித்தார். இந்த விஷயத்தில் அவர் மிகவும் தைரியத்துடன் செயல்பட்டார். இதற்காக அவரை நான் பாராட்டுகிறேன். என்னுடைய கருத்துப்படி ஆஸ்திரேலியாவில் விராட் கோலி மீண்டும் சிறப்பாக விளையாட ஆரம்பிப்பார். ஏனென்றால் அவருடைய ஆட்ட பாணிக்கு ஆஸ்திரேலியா மிகவும் சரியாக இருக்கும். தவிராட் கோலிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் நேரம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்