125 ரன்களுக்குள் அதிகமுறை ஆல் அவுட்- மோசமான சாதனை படைத்த பெங்களூரு அணி
15 முறை 125 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி மோசமான சாதனையை படைத்துள்ளது
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டம் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் பெங்களூர் அணியும் கொல்கத்தா அணியும் மோதின. கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 204 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி 123 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
கொல்கத்தா அணியுடன் நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் அணி 123 ரன்னில் ஆல் அவுட் ஆனதன் மூலம் மோசமான சாதனையை படைத்துள்ளது. ஐபிஎல் தொடரில் குறைந்த ரன்னில் அதிகமுறை ஆல் அவுட் ஆன டெல்லி அணியின் சாதனையை பெங்களூர் அணி சமன் செய்துள்ளது. 15 முறை 125 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி மோசமான சாதனையை படைத்துள்ளது