ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட் - முதல் இடம் பிடித்த ரோகித் சர்மா

மும்பையில் இன்று நடைபெற்று வரும் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

Update: 2024-04-01 15:29 GMT

கோப்புப்படம் ANI

மும்பை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 14-வது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் தொடக்க ஆட்டகாரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினர். ஒரு ரன் எடுப்பதற்குள் அந்த அணி இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

ரோகித் சர்மா டக் அவுட்டில் வெளியேறினார். இதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக் உடன் ரோகித் சர்மா இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் 17 முறை டக் அவுட் ஆகி முதல் இடத்தில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தப்படியாக மேக்ஸ்வெல், பியூஸ் சாவ்லா, மந்தீப் சிங், சுனில் நரைன் (15 முறை) ஆகியோர் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்