பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: அபாயகரமான ஆடுகளத்தால் பாதியில் நிறுத்தப்பட்ட ஆட்டம்..!
நேற்று பெர்த் ஸ்கார்சர்ஸ்-மெல்போர்ன் ரெனிகேட்ஸ் இடையிலான ஆட்டம் கீலாங் ஸ்டேடியத்தில் நடந்தது.;
கீலாங்,
பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று பெர்த் ஸ்கார்சர்ஸ்-மெல்போர்ன் ரெனிகேட்ஸ் இடையிலான ஆட்டம் கீலாங் ஸ்டேடியத்தில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பெர்த் அணி 6.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 30 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் நிறுத்தப்பட்டது.
ஏனெனில் ஆடுகளத்தில் பந்து சீரற்ற முறையில் தாறுமாறாக பவுன்ஸ் ஆனது. இதனால் பயந்து போன பேட்ஸ்மேன்கள் நடுவர்களிடம் புகார் கூறினர். இதைத் தொடர்ந்து ஆடுகளத்தை ஆராய்ந்த நடுவர்கள், இது அபாயகரமான ஆடுகளம், விளையாடுவதற்கு உகந்த நிலையில் இல்லை என்று கூறி ஆட்டத்தை அத்துடன் ரத்து செய்தனர். முந்தைய நாள் பெய்த மழையால் ஆடுகளம் முழுமையாக நனைந்து ஈரமானதால் வேகப்பந்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.