டெல்லிக்கு எதிரான ஆட்டத்தை தவறவிடும் மயங்க் யாதவ்...காரணம் என்ன...?

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் சீசன் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-04-09 03:16 GMT

Image Courtesy: AFP / @LucknowIPL

லக்னோ,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் சீசன் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

கே.எல். ராகுல் தலைமையில் மிகச்சிறப்பாக ஆடி வரும் லக்னோ அணி இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 1 தோல்வி கண்டுள்ளது. லக்னோ அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 12ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை லக்னோவில் சந்திக்க உள்ளது.

இந்நிலையில் வரும் 12ம் தேதி நடைபெற உள்ள டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து லக்னோ அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் விலகி உள்ளதாக லக்னோ அணியின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அடிவயிற்று பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருவார காலம் மருத்துவ மேற்பார்வையில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் மயங்க் யாதவ் லக்னோ அணி விளையாட உள்ள அடுத்த ஆட்டத்தில் (டெல்லிக்கு எதிராக) ஆட மாட்டார் என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 7ம் தேதி குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் 1 ஓவர் வீசி 13 ரன் கொடுத்த நிலையில் மயங்க யாதவ் காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்