ஐ.பி.எல். மெகா ஏலம்: சென்னை அணியில் மீண்டும் இணைந்த மண்ணின் மைந்தன் அஸ்வின்
இந்திய வீரர் அஸ்வினை சென்னை அணி ஏலத்தில் வாங்கியுள்ளது.
ஜெட்டா,
18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த வருடம் (2025) நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் ஜெட்டா நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
இந்நிலையில் மெகா ஏலம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் முன்னணி வீரரான சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடிக்கு வாங்கியுள்ளது.
அஸ்வின் 2009 முதல் 2015 வரை ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ளார். தற்போது 9 வருடங்களுக்கு பின் மீண்டும் 'மண்ணின் மைந்தன்' அஸ்வின் சென்னை அணியில் இணைந்திருப்பது ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.