லக்னோவுக்கு எதிரான ஆட்டம்: மும்பை அணியில் பும்ராவுக்கு பதிலாக அர்ஜுன் தெண்டுல்கர் சேர்ப்பு
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் மும்பை - லக்னோ அணிகள் விளையாடி வருகின்றன.;
மும்பை,
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி லக்னோ பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியிலிருந்து மும்பை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக அர்ஜுன் தெண்டுல்கர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.