பெண்கள் பிரிமீயர் லீக் போட்டிக்கான குஜராத் ஜெயன்ட்ஸ் அணியில் கிம்பர்லி கார்த் சேர்ப்பு
ஆல்-ரவுண்டர் தியாந்திரா டோட்டின் உடல் நலக்குறைவு காரணமாக தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.
மும்பை,
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான குஜராத் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த வெஸ்ட்இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் தியாந்திரா டோட்டின் உடல் நலக்குறைவு காரணமாக இந்த போட்டி தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.
அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் கிம்பர்லி கார்த்தை குஜராத் ஜெயன்ட்ஸ் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. அவர் உடனடியாக குஜராத் அணியினருடன் இணைந்துள்ளார். தியாந்திரா டோட்டினை குஜராத் அணி ரூ.60 லட்சத்துக்கு வாங்கி இருந்தது. கிம்பர்லி கார்த் ஏலத்தின் போது விலைபோகவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.