ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற நேபாளம் பந்துவீச்சு தேர்வு!

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் நடைபெற்று வருகிறது.

Update: 2023-12-10 05:44 GMT

image courtesy; twitter/ @ACCMedia1

துபாய்,

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தானும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பானும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் ஒரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நேபாளம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்