ஜெய்ஸ்வால் அபார பேட்டிங்... இங்கிலாந்துக்கு எதிராக முதல் நாளில் இந்தியா சிறப்பான ஆட்டம்

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

Update: 2024-02-02 11:31 GMT

image courtesy; twitter/@ICC

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இவர்களில் ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதன்பின் களமிறங்கிய சுப்மன் கில் சிறிது நேரம் நிலைத்து விளையாடி 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய வீரர்களில் அயர் 27 ரன்களிலும், ரஜத் படிதார் 32 ரன்களிலும், அக்சர் படேல் 27 ரன்களிலும், ஸ்ரீகர் பாரத் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் தவிர யாரும் பெரிய இன்னிங்சை விளையாடவில்லை. ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 179 ரன்கள் குவித்து அசத்தி உள்ளார்.

முதல் நாள் முடிவில் இந்தியா 93 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. அஸ்வின் 5 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 179 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக சோயப் பஷிர் மற்றும் ரெஹன் அகமது தலா 2 விக்கெட்டுகள் விழ்த்தியுள்ளனர்.

நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்