இந்திய கிரிக்கெட் வீரரை விமர்சித்த இர்பான் பதான்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.

Update: 2024-02-11 03:38 GMT

புதுடெல்லி,

கடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது ஒரு வருடமாக இந்திய அணியுடன் பயணித்ததால் ஏற்பட்ட பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த இஷான் கிஷன் குடும்பத்தை பார்க்க அனுமதி கொடுக்குமாறு பிசிசிஐ-யிடம் கேட்டார். அதில் நியாயமும் இருந்ததால் பிசிசிஐ உடனடியாக அந்த தொடரிலிருந்து விடுப்பு கொடுத்தது.

அந்த நிலையில் இந்திய அணிக்காக மீண்டும் விளையாட தற்போது நடைபெற்று வரும் 2024 ரஞ்சிக் கோப்பையில் விளையாடி பார்முக்கு திரும்பி தயாராக இருங்கள் என்று பயிற்சியளர் ராகுல் டிராவிட் அவருக்கு அறிவுரை தெரிவித்தார். அதனால் கடந்த 9-ம் தேதி அரியானாவுக்கு எதிராக துவங்கிய போட்டியில் தன்னுடைய மாநில அணியான ஜார்கண்டுக்கு இஷான் கிஷன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதனை செய்யாத இஷான் கிஷன், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் குர்ணால் பாண்ட்யா ஆகியோருடன் இணைந்து குஜராத்தில் உள்ள கிரண் மோர் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருவது தெரிய வந்தது அதன் காரணமாக தற்போது இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இஷான் கிஷன் தேர்வு செய்யப்படவில்லை.

இந்நிலையில் பயிற்சி எடுக்க தேவையான நேரம் இருக்கும் ஒரு வீரருக்கு இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதற்கு நேரமில்லையா என இஷான் கிஷனை முன்னாள் வீரர் இர்பான் பதான் விமர்சித்துள்ளார்.

இது குறித்து இர்பான் பதான், தனது எக்ஸ் பக்கத்தில் இஷான் கிஷனின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்துள்ளது பின்வருமாறு;- "பயிற்சி எடுப்பதற்கு போதுமான உடல் தகுதியுடன் இருக்கும் ஒருவர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாதது பற்றி குழப்பம் ஏற்படுகிறது. இது எப்படி அர்த்தமுள்ளதாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்