ஐ.பி.எல். வரலாற்றில் மோசமான சாதனை பட்டியலில் முதலிடம் பிடித்த மொகித் சர்மா

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் டெல்லி - குஜராத் அணிகள் விளையாடி வருகின்றன.;

Update:2024-04-24 22:00 IST

image courtesy: PTI

புதுடெல்லி,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன்படி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 40-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ரிஷம் பண்ட் 88 ரன்களும், அக்சர் படேல் 66 ரன்களும் குவித்தனர். பின்னர் 225 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடி வருகிறது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் குஜராத் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான மொகித் சர்மா 4 ஓவர்களில் விக்கெட் வீழ்த்தாமல் 70 ரன்கள் வாரி வழங்கினார்.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் வாரி வழங்கிய பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. மொகித் சர்மா - 73 ரன்கள் (4 ஓவர்கள்)

2. பாசில் தம்பி - 70 ரன்கள் (4 ஓவர்கள்)

3. யாஷ் தயாள் - 69 ரன்கள் (4 ஓவர்கள்)

4. டாப்லி - 68 ரன்கள் (4 ஓவர்கள்)

Tags:    

மேலும் செய்திகள்