ஐபிஎல் : ஹைதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி லக்னோ அபார வெற்றி

16ஓவர்கள் முடிவில் 5விக்கெட் இழப்பிற்கு 127ரன்கள் எடுத்து லக்னோ அணி வெற்றி பெற்றது

Update: 2023-04-07 17:20 GMT

லக்னோ,

16வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் 10வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின

.இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.அதன்படி பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியின் மயங்க் அகர்வால் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சிறப்பாக விளையாடிய அன்மோல்பிரீத் சிங் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து லக்னோ அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் ஹைதராபாத் அணிக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர்

அடுத்த வந்த கேப்டன் மார்க்ரம் ரன் எதுவும் எடுக்காமலும் , ஹர்ரி புரூக் 3 ரன்களும்எடுத்துஆட்டமிழந்தார். மறுமுனையில் நிலைத்து ஆடிய ராகுல் திரிபாதி 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 8விக்கெட் இழப்பிற்கு 121ரன்கள் எடுத்தது. லக்னோ சார்பில் குருனால் பாண்டியா 3 விக்கெட்டும் ,அமித் மிஸ்ரா 2 விக்கெட் , ரவி பிஷ்ணோய் , யாஷ் தாகூர் தலா 1 விக்கெட்டும்எடுத்தனர். தொடர்ந்து122 ரன்கள் இலக்குடன் லக்னோ அணி விளையாடியது.

தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல் , கைல் மேயர்ஸ் களமிறங்கினர். தொடக்கத்தில் மேயர்ஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த தீபக் ஹூடா 7 ரன்களில் வெளியேறினார்.

மறுமுனையில் கே.எல். ராகுல் அதிரடியாக ஆடினார் . பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய அவர் 35ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் . குருனால் பாண்டியா 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ,

இறுதியில் 16  ஓவர்கள் முடிவில்    5 விக்கெட் இழப்பிற்கு 127ரன்கள் எடுத்து லக்னோ அணி வெற்றி பெற்றது. .இந்த வெற்றியால் லக்னோ அணி 3 போட்டியில் விளையாடி , 2 வெற்றி என புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது .

ஹைதராபாத் அணி 2 போட்டியில் 2 தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்