ஐ.பி.எல் கிரிக்கெட்; சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் நாளை மோதல்
ஐ.பி.எல் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.;
ஐதராபாத்,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 55 லீக் ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தி நாளை நடைபெறும் 57வது லீக் ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோத உள்ளன.
நாளை நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு அதிகமாகும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.