ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: லீக் சுற்று நிறைவடைந்தது - இன்று ஓய்வு நாள்

சேப்பாக்கத்தில் நாளை முதலாவது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன.;

Update:2023-05-22 01:48 IST

சென்னை,

10 அணிகள் பங்கேற்ற 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 31-ந்தேதி தொடங்கியது. அன்றிலிருந்து நாள்தோறும் இடைவிடாது ஆட்டங்கள் நடந்து வந்தது. நேற்றிரவு 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் அரங்கேறியது. லீக் சுற்று நிறைவடைந்த நிலையில் போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.

சென்னை சேப்பாக்கத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. 24-ந்தேதி வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) ஆட்டத்தில் லக்னோ-மும்பை அணிகள் சந்திக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்