ஐபிஎல் 2023 : பெங்களூரு அணியுடன் இணைந்த விராட் கோலி
இது தொடர்பான புகைப்படத்தை அணி நிர்வாகம் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
சென்னை,
இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் முடிவடைந்த நிலையில் ,விராட் கோலி இன்று பெங்களூரு அணியுடன் இன்று இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அணி நிர்வாகம் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.