ஐபிஎல் 2023: ஆர்சிபி சிறந்த பந்துவீச்சு தாக்குதலை கொண்டுள்ளது - இந்திய முன்னாள் வீரர்

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 31ம் தேதி குஜராத்தில் தொடங்குகிறது.

Update: 2023-03-26 02:25 GMT

மும்பை,

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 31ம் தேதி குஜராத்தில் தொடங்க உள்ளது. 31ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன. குஜராத் அணிக்கு ஹர்த்திக் பாண்ட்யாவும், சென்னை அணிக்கு எம்.எஸ். தோனியும் கேப்டன்களாக செயல்பட உள்ளனர்.

ஐபிஎல் தொடரை முன்னிட்டு வெளிநாட்டு வீரர்கள் தங்கள் அணிகளுடன் இணைந்து வருகின்றனர். இந்த வருடத்துடன் ஐபிஎல் தொடரில் இருந்து தோனி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அவரை வெற்றி கோப்பையுடன் வழி அனுப்ப சென்னை அணியினர் தீவிரமாக முயற்சி செய்வர்.

இந்த வருட ஐபிஎல் தொடரில் பல்வேறு முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகி உள்ளதால் எந்த அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் பந்து வீச்சு தாக்குதல் மிகவும் பலமாக உள்ளது எனவும், அது தான் அவர்களின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றும் எனவும் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

அவர்களின் வேகப்பந்து வீச்சு ஆழமானது. ஹேசில்வுட் பிட் இல்லையென்றாலும் டாப்லே வைத்திருக்கிறார்கள். சுழலில் வனிந்து ஹசரங்கவை வைத்துள்ளனர். அவர்களிடம் முகமது சிராஜ் மற்றும் ஹர்ஷல் படேல் உள்ளனர். அவர்களின் பந்துவீச்சு சரியானது, மேக்ஸ்வெல் கூட பந்துவீச முடியும் என்றார்.

இந்த ஐபிஎல்லில், என்னைப் பொறுத்தவரை, ஆர்சிபி சிறந்த பந்துவீச்சு தாக்குதலை கொண்டுள்ளது. அது அவர்களின் ஒருங்கிணைந்த எக்ஸ்-காரணியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்