பெண்கள் பிரிமீயர் லீக் போட்டியில் இந்திய வீராங்கனைகள் கேப்டன்களாக இருந்திருக்க வேண்டும்: அஞ்சும் சோப்ரா

பெண்கள் பிரிமீயர் லீக் போட்டியில் இந்திய வீராங்கனைகள் கேப்டன்களாக இருந்திருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா தெரிவித்தார்.

Update: 2023-03-04 20:06 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா நேற்று அளித்த ஒரு பேட்டியில், 'பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பெரும்பாலான அணிகள் வெளிநாட்டு வீராங்கனைகளை கேப்டனாக நியமித்து இருப்பதை நான் விரும்பவில்லை. இது இந்தியன் லீக் போட்டி. இந்திய சூழலில் நடக்கிறது. எனவே தகுதி படைத்த இந்திய வீராங்கனைகளை கேப்டனாக நியமிக்க வேண்டும்.

கடந்த 20 ஓவர் சேலஞ்ச் போட்டியில் தீப்தி ஷர்மா அணிக்கு தலைமை தாங்கியதால் அவரை கேப்டனாக நியமித்து இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். சர்வதேச போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். டெல்லி கேப்பிட்டல்சில் மெக் லானிங் இருக்கும் போது அந்த அணியின் கேப்டனாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆக முடியாது' என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்