விஜயின் 'நா ரெடி' பாடலுக்கு நடனம் ஆடும் இந்திய கிரிக்கெட் வீரர் - வீடியோ...!
நா ரெடி பாடலுக்கு இந்திய கிரிக்கெட் வீரரான வெங்கடேஷ் ஐயர் நடனமாடி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.;
மும்பை,
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் சினிமா பாடல்களை ரீகிரியேட் செய்து நடனமாடி அதனை சமூக வலைதளத்தில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ள தளபதி விஜய்யின் லியோ பட பாடலான "நான் ரெடி தான் வரவா" தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
அதேபோன்று சமூக வலைதளத்தில் நாள்தோறும் ஏராளமானோர் இந்த பாடலை ரீகிரியேட் செய்து அதேபோன்று நடனமாடி தங்களது திறமையினை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது விஜய்யின் இந்த பாடலுக்கு இந்திய கிரிக்கெட் வீரரான வெங்கடேஷ் ஐயரும் நடனமாடி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. விரைவில் வெளியாக இருக்கும் லியோ படத்தின் நான் ரெடியா பாடலுக்கு அவர் ஆடியுள்ள நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.