உலகக்கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி...!
விராட் கோலி அரைசதம்...!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 67 பந்துகளில் 50 ரன்கள் விளாசியுள்ளார். அவர் 5 பவுண்டரிகள் விளாசி களத்தில் உள்ளார்.
25 ஓவர்கள் முடிவில் இந்தியா 143 ரன்கள் சேர்ப்பு
25 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 42 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
விராட் கோலி, ஸ்ரேயாஸ் பொறுப்பான ஆட்டம்
20 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 37 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
15 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 24 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
சுப்மன் கில் அவுட்
சுப்மன் கில் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேசவ் மகராஜ் ஓவரில் அவுட் ஆனார். தற்போதைய நிலவரப்படி, இந்திய அணி 10.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது.
அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ரோகித் சர்மா 40 ரன்களில் ஆட்டமிழந்தார். ரபாடா வீசிய பந்தில் பவுமாவிடம் கேட்ச் கொடுத்து ரோகித் சர்மா பெவிலியன் திரும்பினார்.
இந்திய அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மாவும் சுப்மன் கில்லும் களத்தில் உள்ளனர்.