அர்ஜுனா விருதுக்கு முகமது ஷமி பெயர் பரிந்துரை
முகமது ஷமி உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார்.;
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் கடந்த உலகக்கோப்பை தொடரில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில், அர்ஜுனா விருதுக்கு முகமது ஷமியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது உரிய விருது அர்ஜுனா விருதாகும்.
நடப்பு ஆண்டு அர்ஜுனா விருதுக்கான வீரர், வீராங்கனை பட்டியலில் முகமது ஷமியின் பெயரையும் தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது.
உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடியதையடுத்து முகமது ஷமியின் பெயரை தேர்வுக்குழு அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.