உலகக்கோப்பை லீக் ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறி இந்தியா சாதனை.!

நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி, 160 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது.

Update: 2023-11-13 00:14 GMT

புதுடெல்லி,

உலகக்கோப்பை தொடரின் 45வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில், இந்தியா - நெதர்லாந்து அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி, நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரவெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 9 லீக் ஆட்டங்களில் விளையாடி, அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிபெற்று 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மற்ற அணிகள் அனைத்தும் லீக் ஆட்டங்களில் குறைந்தது 2 தோல்விகளை சந்தித்துள்ள நிலையில், இந்திய அணி மட்டுமே அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.

உலகக்கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, நாளை மறுநாள் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியுடன் மோத உள்ளது. கடந்த 2019-ல் நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இதே நியூசிலாந்து அணியுடன் தோல்வியை சந்தித்த இந்திய அணி, தற்போது அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Tags:    

மேலும் செய்திகள்