இந்தியா-வங்காளதேச பெண்கள் அணி: முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
இந்தியா-வங்காளதேச பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.;
மிர்புர்,
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது. இதில் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.
இந்த நிலையில் இந்தியா-வங்காளதேச பெண்கள் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று காலை 9 மணிக்கு நடக்கிறது.