இந்தியா- ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்; முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர்கள் விலகல்...!!

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்திலிருந்து ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர்கள் விலகியுள்ளனர்.

Update: 2023-09-21 10:27 GMT

image courtesy; ICC

புது டெல்லி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் ஆட்டம் நாளை மொகாலியில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் மிட்செல் ஸ்டார்க் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் அணியில் இடம்பெற மாட்டார்கள் என அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அறிவித்துள்ளார்.

காயத்திலிருந்து மீண்டு வரும் இருவரும் அடுத்த ஆட்டத்தில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்