ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் அஸ்வின்

அஸ்வின் 871 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

Update: 2024-09-25 10:43 GMT

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள்  தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர் அஸ்வின் 871 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

மேலும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 854 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், சுழற்பந்துவீச்சாளர் ஜடேஜா 804 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் உள்ளனர்.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் 751 புள்ளிளுடன் 5வது இடத்திலும், ரிஷப் பண்ட் 731 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் உள்ளனர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 751 புள்ளிளுடன் 10வது இடத்தில் உள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின், ஜடேஜா, பும்ரா, பண்ட் , ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறப்பாக விளையாடியது குறிப்பிடத்தக்கது 

Tags:    

மேலும் செய்திகள்