2022ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த ஒருநாள் ஆடவர் அணி அறிவிப்பு - 2 இந்திய வீரர்கள், கேப்டன் யார் தெரியுமா?

2022ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த ஒருநாள் ஆடவர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-01-24 09:10 GMT

Image Courtesy: AFP 

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் அனைத்து வீரர்களின் செயல்பாட்டை வைத்து சிறந்த வீரர்களை கொண்ட ஒருநாள், டி20, டெஸ்ட் அணிகளை ஐசிசி அறிவிக்கும்.

அந்த வகையில் ஐசிசி நேற்று 2022ம் ஆண்டுக்கான ஆடவர் டி20 அணி மற்றும் பெண்கள் டி20 அணியை அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று 2022ம் ஆண்டுக்கான ஒருநாள் ஆடவர் அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த அணிக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அணிடில் இந்திய அணியில் இருந்து ஒரு பேட்ஸ்மேன், ஒரு பந்துவீச்சாளர் என இரு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமும், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து 3வது இடத்துக்கு வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப்பும், 4வது இடத்துக்கு இந்திய வீரர் ஸ்ரேயஸ் அய்யரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து 5வது இடத்தில் நியூசிலாந்தின் விக்கெட் கீப்பட் பேட்ஸ்மேன் டாம் லதாமும், ஆல்ரவுண்டர்களாக 6வது மற்றும் 7வது இடத்தில் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசாவும், வங்கதேசத்தின் மஹதி ஹசன் மிராசும் உள்ளனர்.

இதையடுத்து பந்துவீச்சாளர்களாக 7 முதல் 11 இடங்களுக்கு அல்ஜாரி ஜோசப் (வெஸ்ட் இண்டீஸ்), முகமது சிராஜ் (இந்தியா), டிரெண்ட் பவுல்ட் (நியூசிலாந்து), ஆடம் ஜாம்பா (ஆஸ்திரேலியா) ஆகியோர் தேர்வு செய்ப்பட்டுள்ளனர். இந்த அணிக்கு பாபர் ஆசம் கேப்டனகாவும், டாம் லதாம் விக்கெட் கீப்பராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

2022ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த ஒருநாள் அணி விவரம்:-

1. பாபர் ஆசம் (கேப்டன்)

2. டிராவிஸ் ஹெட்

3. ஷாய் ஹோப்

4. ஸ்ரேய்ஸ் அய்யர்

5. டாம் லதாம் (விக்கெட் கீப்பர்)

6. சிக்கந்தர் ராசா

7. மெஹதி ஹசன் மிராஸ்

8. அல்ஜாரி ஜோசப்

9. முகமது சிராஜ்

10. டிரெண்ட் பவுல்ட்

11. ஆடம் ஜாம்பா

Tags:    

மேலும் செய்திகள்