அந்த இந்திய வீரரின் விக்கெட்டை வீழ்த்தும் வழியை கண்டறிவேன் - ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நவம்பர் மாதம் ஆரம்பமாக உள்ளது.;
சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தங்களிடம் கிளாஸ் நிறைந்த பவுலிங் அட்டாக் இருப்பதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்காட் போலந்து கூறியுள்ளார். எனவே இம்முறை சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அத்துடன் டேவிட் வார்னரை ஆஷஸ் தொடரில் ஸ்டுவர்ட் பிராட் அடிக்கடி அவுட்டாக்கியதை உலகமே அறியும். அதே போல விராட் கோலியின் விக்கெட்டை நீங்கள் கைப்பற்றுவீர்களா? என்று தொகுப்பாளர் அவரிடம் கேட்டார். அதற்கு விராட் கோலியை அவுட்டாக்குவதற்கான வழியை கண்டறிவேன் என்றும் ஸ்காட் போலந்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "எங்களிடம் உண்மையான கிளாஸ் நிறைந்த பவுலிங் அட்டாக் இருக்கிறது என்று நினைக்கிறேன். உலகின் சிறந்த வீரர்கள் எங்களுடைய அணியில் உள்ளனர். அதனால் எங்களுடைய சொந்த மண்ணில் நிலவும் சூழ்நிலைகளில் நாங்கள் முன்னணியில் இருப்போம் என்று நினைக்கிறேன். விராட் கோலியின் விக்கெட்டை எடுப்பது நன்றாக இருக்கும். அவரை மீண்டும் அவுட்டாக்குவதற்கான வழியை நான் கண்டறிவேன் என்று நம்புகிறேன" என கூறினார்.