அந்த 3 வீரர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் - பாகிஸ்தான் கேப்டன்

பாகிஸ்தான் பேட்டிங் துறையின் முதன்மை வீரராக போற்றப்படும் பாபர் சமீப காலமாகவே கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் மோசமாக செயல்பட்டு வருகிறார்.

Update: 2024-07-22 11:28 GMT

image courtesy: AFP

லாகூர்,

சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

சமீப காலங்களாகவே தடுமாறி வரும் அந்த அணி கடந்த வருடம் பாபர் அசாம் தலைமையில் 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விகளுக்கு பொறுப்பேற்று தம்முடைய பதவியை ராஜினாமா செய்த பாபர் அசாம் மீண்டும் இந்த தொடரை முன்னிட்டு கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் இந்த தொடரிலும் அவருடைய தலைமையில் சுமாராக விளையாடிய பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனால் அவருடைய கேப்டன்ஷிப் மீது மீண்டும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஏனெனில் பாகிஸ்தான் பேட்டிங் துறையின் முதன்மை வீரராக போற்றப்படும் அவர் சமீப காலமாகவே கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் மோசமாக செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள பாபர் அசாம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கிரிக்கெட்டில் தான் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதில் அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலி, வில்லியம்சன், ஜோ ரூட் ஆகிய மூன்று பேரிடம் நான் அதிக அளவு பேச வேண்டும். அவர்களிடம் இருந்து ஏற்கனவே பல அறிவுரைகள் கேட்டிருக்கிறேன். இருந்தாலும் அவர்களிடம் இருந்து இன்னும் நிறைய கிரிக்கெட் தொடர்பான அறிவுரைகளை கற்றுக் கொள்ள விரும்புகிறேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்