ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் மறைவு என பரவும் வதந்தி

ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் மறைவு என பரவிய வதந்தி பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

Update: 2023-08-23 03:41 GMT

ஹராரே,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் காலமானதாக பல்வேறு தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனால் முன்னாள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் மிக முக்கிய வீரராக பார்க்கப்பட்ட ஹீத் ஸ்ட்ரீக் கடந்த 1993ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அவர் ஜிம்பாப்வே அணிக்காக 65 டெஸ்ட் மற்றும் 189 ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ளார்.

65 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1990 ரன்னும், 216 விக்கெட்டுகளும், 189 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2943 ரன்னும், 239 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளார். இவர் கடைசியாக கடந்த 2005ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆடினார். அதன் பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

வங்காளதேசம், ஜிம்பாப்வே சர்வதேச அணிகளுக்கும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று மரணம் அடைந்தார்.

அவரது மறைவுக்கு ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் சீன் வில்லியம்ஸ், இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இவர் இறப்பு குறித்த தகவல் வதந்தி என தெரியவந்தது. அவர் இறந்ததாக முன்னாள் வீரர் ஓலங்காவும் தனது தளத்தில் பதிவு செய்திருக்கிறார். பின்னர் உண்மை நிலையை அறிந்து கொண்டதும், பழைய பதிவை நீக்கியதுடன், ஹீத் ஸ்ட்ரீக் நலமுடன் இருப்பதாக குறிப்பிட்டார். ஹீத் ஸ்ட்ரீக் தொடர்பான தகவலால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்