"ஐபிஎல்-ல் இவர் தான் சிறந்த பவுலர்"... சி.எஸ்.கே முன்னாள் வீரர் ரெய்னா கருத்து
ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய பந்துவீச்சாளர் குறித்து ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.;
ஐபிஎல் வரலாற்றில் லசித் மலிங்கா தான் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறி உள்ளார்.
இது தொடர்பாக பேசிய ரெய்னா, ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய பந்துவீச்சாளர் லசித் மலிங்கா எனக் கூறி உள்ளார். இந்திய பந்துவீச்சாளர் பும்ராவின் வளர்ச்சியில் மலிங்காவின் பங்களிப்பும் அதிகம் இருப்பதாக ரெய்னா தெரிவித்து உள்ளார்.