மைதானத்தில் ஆலங்கட்டி மழை... பெங்களூரு - பஞ்சாப் இடையிலான போட்டி சிறிது நேரம் பாதிப்பு
பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டத்தின்போது திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது.;
தர்மசாலா,
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன் பேரில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.
பெங்களூரு அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்திருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. அத்துடன் சிறிது நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. சுமார் 15 நிமிடங்கள் ஆலங்கட்டி மழை பெய்தது. மழை காரணமாக அரை மணி நேரம் பாதிக்கப்பட்ட ஆட்டம், தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.