கடைசி பந்தில் லக்னோ வெற்றி... பெங்களூரு ரசிகர்களை நோக்கி 'வாயை மூடும்படி செய்கை' செய்த கம்பீர்

பெங்களூரு அணியை கடைசி பந்தில் வீழ்த்தில் லக்னோ அபார வெற்றிபெற்றது.

Update: 2023-04-11 07:51 GMT

பெங்களூரு,

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூரு - லக்னோ அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது.

213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய லக்னோ நிகோலஸ் பூரானின் அதிரடியால் கடைசி பந்தில் வெற்றிபெற்றது.

கடைசி ஓவரில் 5 ரன் தேவைப்பட்ட நிலையில் கடைசி பந்தில் லக்னோ வெற்றிபெற்றது. கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட நிலையில் பந்து கீப்பர் தினேஷ் கார்த்திக் பக்கம் செல்ல அவர் பந்தை ஸ்டம்ப் நோக்கி வீசினார். ஆனால் அதற்குள் லக்னோ வீரர்கள் ரன் ஓடியதால் லக்னோ அணி கடைசி பந்தில் திரில் வெற்றிபெற்றது.

இந்த திரில் போட்டியில் லக்னோ வெற்றிபெற்றதையடுத்து லக்னோ வீரர்கள் மைதானத்திற்குள் விரைந்து வந்து ஆரவாரம் செய்தனர்.

அப்போது, லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் மைதானத்தில் குவிந்திருந்த பெங்களூரு ரசிகர்களை நோக்கி 'வாயை மூடும்படி செய்கை' செய்தார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்