இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது.
நாக்பூர்,
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது.
இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்ற வகையிலும், அண்மைகாலமாக இவ்விரு அணிகளும் நீயா-நானா? என்று வார்த்தை போரில் முட்டிக்கொள்வதாலும் இந்த டெஸ்ட் போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை தூண்டியுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்திய அணி தரப்பில் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தங்களது அறிமுக போட்டியில் இன்று விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.